TamilDbox
News
ஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்

ஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்

20/01/18

வைரமுத்து அவர்களே நீங்கள் நம் தமிழ்நாட்டின் தமிழ் பொக்கிஷம்.யாரோ சில பேரின் புரிதல் இல்லாத அறிவு மற்றும் செயல்களால் உங்களுக்கு எதிரான கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.

உங்களுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லோருமே உங்கள் கட்டுரையை முழுவதுமாக படித்தார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி? தமிழ் கவிஞர்களை இகழ்வதும், வசைபாடுவதும் இந்த சமூகத்திற்கு புதிதல்ல.இன்று போற்றி புகழ் பாடும் பாரதியைக்கூட அவர் வாழ்ந்த சமகாலத்தில் வசைபாடி வாழவிடாதவர்கள்.கவிராஜனின் கதை தந்த உங்களுக்கு இது தெரியாதா?

ஆண்டாள் நான் வணங்கும் தெய்வம்.அவள் தமிழை எவ்வாறு ஆண்டாள் என்பது உங்கள் கட்டுரையின் மூலமும் மேலும் அழகுற பிரதிபலித்தது.மேற்கோள் மட்டுமே தாங்கள் கூறியது.அர்த்தங்களை இவர்களே வேறுபடுத்தி கொள்வது வருத்ததிற்குரியது.வைரமுத்து அவர்களே ஆண்டாளை நீங்கள் அவமதிக்கவில்லை.

அர்த்தங்களை வேறுபடுத்தி,சிலர் திரித்து கூறிய புரளிகளை உண்மையென்று நம்பி உங்களுக்கு எதிராக நாகரிகமற்ற முறையில் கண்டனங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் உங்களை எதிர்ப்பவர்கள் அல்ல.சிலருடைய அறிவு, மதத்தின் மீது மதம் பிடித்து போனதால் அவர்களின் வலைக்குள் சிக்கி தவிப்பவர்களே இவர்கள்.வைரமுத்து ஆண்டாளை பற்றி  தவறாக கூறவில்லை என்பது நான் வணங்கும் ஆண்டாளுக்கு நன்றாகவே தெரியும்.வைரமுத்துவின் மனசாட்சியும் இதை அறியும்.

ஒரு நல்ல தமிழ் கவிஞனின் மனதை புண்படுத்தியதற்கு சிலரின் வலைக்குள்  சிக்கித்தவிக்கும் அவர்களின் சார்பாக ஆண்டாள் பக்தனின் வருத்தங்கள்.


Comments

A-Z List

Search films by alphabet
TamilDbox
Copyright © TamilDbox All Rights Reserved